×

சி.எம் 4 மணி நேரம்தான் தூங்குறாருங்க! மாஜி எம்எல்ஏ ஐஸ்

தேர்தல் நெருங்க நெருங்க சீட் வாங்குவதற்குள் படாதபாடு படும் நிலை அதிமுகவினருக்கு ஏற்பட்டுள்ளதாம். சேலத்தில் ஜெ.பேரவை கூட்டம் சமீபமா நடந்துச்சு. இதுவரை கூட்டத்திற்கு வராத நிர்வாகிங்க எல்லாம் மேடையில ஏறிட்டாங்களாம். ஒரு கையில மைக்கும், இன்னொரு கையில நோட்டீசையும் பிடிச்சு மேலிருந்து கீழ் வரையுள்ள அனைத்து பெயர்களையும் நீட்டி பேசி பேசியே தொண்டர்களை புல்லரிக்க வச்சிட்டாங்க. தெற்கு தொகுதியில சீட் கேட்டு, மாஜி அமைச்சர் பொன்னையனை சுத்தி சுத்தி வரும் மாஜி மேயர் சவுண்டப்பன், வாக்காளர்களை கும்பிடுவது போல மைக்கை பிடிச்சுக்கிட்டு, கூட்டத்தை பார்த்து, அனைவரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றணும்னு கேட்டுக்கிட்டாராம். இதனை பார்த்த தொண்டர்கள், இப்பவே மாஜி மைக்கோட கும்பிட ஆரம்பிச்சிட்டாரே, இனி என்ன ஆகப்போகுதோன்னு தெரியலியேன்னு முணுமுணுத்தாங்க.

அடுத்ததா பேசிய மாஜி எம்எல்ஏ செல்வராஜ், ‘‘ஜெயலலிதா உதவியாளருக்கிட்ட அம்மா எப்போ தூங்குவாங்கன்னு கேட்டேன். இரவு 1 மணி வரை மக்களுக்காக விழித்திருப்பாங்கன்னு சொன்னாரு. நம்ம முதல்வர் எடப்பாடியாரோ, தினமும் 4 மணி நேரம் தான் தூங்குறாரு. அப்படி மக்களுக்காக உழைக்குறாரு’’ன்னு ஐஸ் கட்டிய தூக்கி வச்சிட்டு போனாரு. ‘நடமாடும் புரட்சி தலைவர் எடப்பாடியாரு’ன்னு சக்திவேல் எம்எல்ஏ அவர் பங்குக்கு புகழ்ந்துட்டு போனாராம். இவங்க எல்லோர் கண்ணு முன்னாடியும் அப்படியே எம்எல்ஏ சீட்டும் ஒருதடவை வந்துட்டு போயிருக்கும் என்று குறும்புக்கார தொண்டர்கள் முணுமுணுத்ததும் காதில் விழுந்தது.

* வேடசந்தூர் வழியாகவும் ‘‘கோட்டை’’க்கு போலாம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு, வேடசந்தூர் தொகுதி செண்டிமென்ட் தொகுதியாக இருக்கிறது. இந்தத் தொகுதியில் கடந்த 14 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி எதுவோ, அதுவே தமிழகத்தில் ஆட்சியமைக்கும் நிலை இருக்கிறது. இத்தொகுதி 1952 முதல் 2016 வரை 15 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 1952 சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியில் போட்டியிட்ட மதனகோபால் வென்றார். அந்த ஆண்டு மட்டுமே இத்தொகுதியில் வெற்றி  பெற்றவர் எதிர்கட்சியாக இருந்துள்ளார்.

பின்னர் 1957, 1962, 1967, 1971,  1977, 1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த 14 சட்டமன்ற தேர்தல்களில், 42 ஆண்டுகளில் இத்தொகுதியில் போட்டியிட்டு தனிகட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், கூட்டணி கட்சி சார்பில் வென்ற வேட்பாளர் சார்ந்த தலைமை கட்சிகளே தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ளன. இங்கு எந்த கட்சி வெல்கிறதோ, அதுவோ, அந்த கூட்டணி கட்சியின் தலைமையோதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.  மேலும் 1984ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வி.பி.பாலசுப்பிரமணியன், 1991ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.காந்திராஜன் ஆகிய இருவரும் துணை சபாநாயகர் பதவி வகித்துள்ளனர்.

Tags : Sleep only for 4 hours! Former MLA Ice
× RELATED சொல்லிட்டாங்க…